சனிப்பெயர்ச்சி ( Sani Peyarchi 2023 )


கிரகங்கள் இடம் பெயர்வது இயல்பான நிகழ்வுதான் என்றாலும் இந்து மதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.




காஞ்சிபுரம்  ஶ்ரீ முத்தீஸ்வரர் திருக்கோவில் ( kanchipuram muktheeswarar temple )


வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நேற்று மாலை 5.23க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான். இந்நிலையில் சனி பகவானுக்கு தனி சன்னதி இருக்கும் திருக்கோளியை சனி பெயர்ச்சி ஒட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலையில் உள்ள ஶ்ரீமுத்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சனி பகவான் தனி சன்னதியில் இன்று சனி பெயர்ச்சி  ஒட்டி காலை முதலே சனி பகவான் சன்னதியில் சிறப்பு யாகம் நடத்தி சனிப்பெயர்ச்சி நடைபெறும் பொதுமக்கள் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு யாகத்தில் பெயர் ராசி நட்சத்திரம் சொல்லி சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டனர்.




சிறப்பு அபிஷேகங்கள்


மேலும் மூலவர் சனி பகவானுக்கு சனி பெயர்ச்சியை ஒட்டி காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் மாலை நேரத்தில் பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு தீபாரணையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து லட்சார்ச்சனையில் கலந்து கொண்டனர். அதிக அளவு பொதுமக்கள் கலந்துகொண்டு எள்  தீபமேற்றி சனி பகவானை வழிபட்டனர்.


திருநள்ளாற்றுக்கு போக முடியாதவர்கள் என்ன செய்யலாம்?


இதனை முன்னிட்டு திருநள்ளாறுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்த வண்ணம் உள்ளனர். இதனால் இன்று பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி சாமி தரிசனம் செய்ய நாள் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலை சுற்றி 1400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 




இந்நிலையில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் ராசிக்காரர்கள் சிலருக்கு இன்று திருநள்ளாறு போக முடியாத நிலை ஏற்படலாம். அப்படியானவர்களாக நீங்கள் இருந்தால் கவலையை விடுங்கள். திருநள்ளாறு செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்? என்பதை காணலாம். 



  • அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வரலாம்.


  • நவகிரகத்தில் உள்ள சனி பகவான் சன்னதியில், கருப்பு துணியில் எள் விளக்கு ஏற்றலாம்.


  • சாலையோரம் வசிப்பவர்கள், ஏழைகளுக்கு உணவு உள்ளிட்ட தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம்.


  • காகம் சனிபகவானின் வாகனம் என்பதால் இன்றைய நாளில் காகத்துக்கு உணவு படைத்து பின்னர் சாப்பிடலாம்.


  • இன்று திருநள்ளாறு சென்று வர முடியாத மகரம்,கும்பம் ராசிக்காரர்கள் அடுத்த 48 நாட்களுக்குள் திருநள்ளாறு செல்லலாம்.  



சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறுக்கு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசின் கும்பகோணம் போக்குவரத்து கோட்டம் சார்பில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.