Sani Peyarchi Parigaram 2023: ஏரிகுப்ப யந்திர சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு - குவிந்த பக்தர்கள்

இத்திருக்கோயிலில் பரிகார பூஜை, பரிகார ஓமம், சனிக்கிரக தோஷ நிவர்த்தி பூஜையில் கலந்து கொள்ள ரூ.250 கட்டணம் கட்டிவிட்டு இந்த பரிகார பூஜையில் கலந்து கொள்ளலாம்.

Continues below advertisement

சனிப்பெயர்ச்சி ( Sani Peyarchi 2023 )

கிரகங்கள் இடம் பெயர்வது இயல்பான நிகழ்வுதான் என்றாலும் இந்து மதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

Continues below advertisement

 

 


ஏரிகுப்பம் யந்திர சனீஸ்வரன் கோயில் (erikupam yanthira sanishwarar temple)

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நேற்று மாலை 5.23க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார் சனி பகவான். இந்நிலையில் சனி பகவானுக்கு தனி சன்னதி இருக்கும் கோயிலில் சனி பெயர்ச்சி ஒட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏரிகுப்பம் பகுதியில் உள்ள யந்திர சனீஸ்வரன் திருக்கோவிலில் உள்ள சனி பகவான் தனி சன்னதியில் சனி பெயர்ச்சி ஒட்டி காலை முதலே சனி பகவான் சன்னதியில் சிறப்பு யாகம் நடத்தி, யாகத்தில் பெயர் ராசி நட்சத்திரம் சொல்லி சிறப்பு அர்ச்சனையை பக்தர்கள் மேற்கொண்டனர்.

 


 

மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்துர், தர்மபுரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலத்திலிருந்தும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சனிப்பெயர்ச்சிக்கு ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரன் பகவான் ஆலயத்திற்கு வருகை புரிந்தனர். ஒவ்வொரு சனிப்பெயர்ச்சிக்கு இந்த ஆலயத்தில் நெய் விளக்கு ஏற்றி வைத்து பக்தர்கள் வழிபட்டு நேர்த்தி கடனை செலுத்தினார்கள். கும்பம் ராசிக்கு சனி இடம் பெயர்ந்தார். இதனால் யந்திர சனீஸ்வரர் ஆலயத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று யந்திர சனீஸ்வரரை வணங்கி வழிபட்டனர். இங்கு டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 


யந்திர வடிவில் தாயார் சாயா தேவியுடன் யந்திர சனீஸ்வரன் கோயில்

நவகாரங்களின் ஒருவரான சனி பகவனை சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள ஏரிகுப்பத்தில் இவர் எந்திரம் பொறித்த சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பியுள்ளார். சனீஸ்வரர் ஈஸ்வரர் பட்டம் பெற்றவர் என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து சிவலிங்கத்தின் பானை வடிவிலேயே சிலை அமைத்து கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்கு பின் கோயில் அழிந்து சாமி சிலை மட்டும் திறந்த வெளியே இருந்தது. பின் பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோவில் எழுப்பினர். எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு யந்திர சனீஸ்வரர் என்ற பெயர் ஏற்றப்பட்டது. அதே சமயம் இத்திருக்கோயிலில் பரிகார பூஜை, பரிகார ஓமம், சனிக்கிரக தோஷ நிவர்த்தி பூஜையில் கலந்து கொள்ள ரூ.250 கட்டணம் கட்டிவிட்டு இந்த பரிகார பூஜையில் கலந்து கொள்ளலாம்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola