கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
41 நாட்கள் பக்தர்கள் விரதமிருக்கும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை. பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் தரிசனம் தரும் ஐயப்பனை தரிசனம் செய்ய 41 நாட்கள் கடுமையான விரதம் இருந்து நடைபயணமாக மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் அதிகாலை எழுந்து சரண கோசங்களுடன் தங்களது விரதத்தை தொடங்குவர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். முன்பதிவு செய்த பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மகர ஜோதி, கார்த்திகை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
இன்று 17 ஆம் தேதி அதிகாலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 17ஆம் தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். 27 ஆம் தேதி மாலை நடை அடைக்கப்படும். டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். தொடர்ந்து ஜனவரி 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20 ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றைய நாளுடன் இந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு தரிசனம் நிறைவுபெறும்.