மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சபரிமலைக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற இருக்கும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Erode East Bypoll: பயம்..! திமுக+ மீதா? தோல்வி மீதா? இடைத்தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், யாருக்கு லாபம்?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  பிரசித்தி  நிகழ்வான மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நாளை நடைபெற உள்ளது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்படும் நிலையில், நாளை மாலை 6 மணியளவில் சன்னிதானத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனையும், அதன்பின் மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சபரிமலைக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நிலக்கல்லில் இருந்து பம்பா வரை வாகனங்கள் நாளை காலை 10 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்றும் நண்பகல் 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மட்டும் மகர ஜோதியை காண வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி இரவு 10 மணி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்றைய தினம் வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் (20-ம் தேதி) காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலமும் நிறைவடையும்.

Indian Cricket Team: இனி விக்கெட் மழை தான்..! கம்பேக் கொடுத்த ஷமி, இங்கி., எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு

குறிப்பாக நாளை (14.01.2025) நடைபெற உள்ள மகரஜோதி தரிசனத்தில் பிறமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தில் பிற மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொள்ளும் பக்தர்கள் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்ப வரும் பொழுது சத்திரத்திலிருந்து புல்மேடு வழியாகவும், மற்றும் கேரள வனத்துறையினை ஒட்டியுள்ள மலைப்பாதை பகுதிகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையானது பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இதற்கு சபரிமலை சென்று திரும்பும் பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பினை தரும்படி மாவட்டஆட்சித்தலைவர் ஷஜீவனா கேட்டுக்கொண்டுள்ளார்.