Indian Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர்


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் ஜனவரி 22ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமயிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் இளம் வீரர்களாகவே உள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்த மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.



இந்திய அணி அறிவிப்பு:


சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (WK), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (vc), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி , வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (WK). 


முகமது ஷமி கம்பேக்


கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 19 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்குப் பிறகு, காயம் காரணமாக முகமது ஷமி சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். காயங்கள் மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. சமீபத்தில், அவரது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு மேலும் சில ஆய்வுகள் தேவை என்று BCCI முடிவு செய்ததை அடுத்து, அவர் இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, நவம்பர் 19 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்குப் பிறகு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தேசிய அணியிலிருந்து வெளியேறினார். நர்சிங் காயங்கள் மற்றும் கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. சமீபத்தில், அவரது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு மேலும் சில ஆய்வுகள் தேவை என்று BCCI முடிவு செய்ததை அடுத்து, அவர் இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தான், சுமார் 13 மாத இடைவெளிக்குப் பிறகு ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முகமது ஷமி சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் அவர் இருக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. 


ஷாக் கொடுத்த பிசிசிஐ


பிசிசிஐயின் அணித் தேர்வில் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பளிக்கப்படாமல்,  துருவ் ஜூரல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரு விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆல்-ரவுண்டர் சிவம் துபேவிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.


பவுலிங் யூனிட்:


ஷமியுடன் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். சுழல் பிரிவில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் தவிர, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணியில் உள்ள மற்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஆவர்.


அதேநேரம், சாம்பியன்ஸ் டிராபிக்கான உத்தேச அணியை இந்தியா தற்போது வரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.