பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோயிலின் கட்டுமான பணிகளை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ஆய்வு - தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையான கட்டமைப்பு என பெருமிதம்.
உசிலம்பட்டி சிறு தெய்வ வழிபாடு
மதுரை உசிலம்பட்டி பகுதி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் என நான்கு முக்கிய நகருக்கு செல்லும் வழியாக அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வறட்சியை தாண்டி விவசாயம் செய்து வருகின்றனர். 58-ம் கால்வாய் போன்ற திட்டம் இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரும் வரமாக அமைந்துள்ளது. இருக்கும் கண்மாய், குளங்களை மக்களே பல இடங்களில் தன்னிச்சியாக தூர்வாரி வருகின்றனர். இப்படி மண்ணையும், கலாச்சாரத்தையும் பெரிதாய் மதிக்கும் இவர்கள் சிறு தெய்வ வழிபாட்டில் மேலோங்கி இருக்கின்றனர். உசிலம்பட்டியில் பல இடங்களில் விநோதமான வழிமுறைகளை பார்க்க முடியும். இப்படி பாரம்பரியமாக இறை வழிபாடு செய்துவரும் உசிலம்பட்டி பகுதி மக்கள் வணங்கும் பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோயிலின் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
உசிலம்பட்டி சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி திருக்கோயில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி திருக்கோயில்., பிரசித்தி பெற்ற இக்கோயிலின் புரணமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை இன்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் நேரில் ஆய்வு செய்தார். கோயிலின் உள்கட்டமைப்பு, சங்கிலி கருப்பசாமி சிலை, அர்த்த மண்டபம் உள்ளிட்டவற்றின் வேலைப்பாடுகளை கண்டு வியந்த எம்எல்ஏ அய்யப்பன் பாராட்டினார், இந்த கட்டமைப்புகளை காணும் போது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிற்ப கலைகள் போன்று உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
உசிம்பட்டி எம்.எல்.ஏ., ஆய்வு
தொடர்ந்து கோயிலின் பாதை மற்றும் தரைதள பகுதிகளில் பேவர் ப்ளாக், கழிப்பறைகள் வசதிகளை மேற்கொள்ள உறுதுணையாக இருந்து பேவர் ப்ளாக் மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து சீலக்காரியம்மன்-க்கு தீப ஆராதனை செய்த நிலையில் எம்எல்ஏ சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகளான ஜான்சன், பிரபு, பிரேம்குமார் மற்றும் கிராம நிர்வாகி நாராயண சாமி, முன்னாள் சிந்துபட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் மற்றும் கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்