சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல பூஜைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு அதிகமானோர் சென்று வருகின்றனர். கேரளாவில் கடந்த சில  நாட்களாக கூடுதலாக மழை பெய்து வருகிறது. ஃபெங்கல் புயலின் எதிரொலியும் இருந்து வந்த நிலையில் சபரிமலை, பம்பா, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் வானிலை மாற்றம் முழுவதும் மாறியுள்ளது. அதேபோல சபரிமலை பகுதியில் மழை எச்சரிக்கையும் விடுத்துள்ளது கேரள வானிலை ஆராய்ச்சி மையம். வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அதிகமானோர் காய்ச்சலுடன் வருவதாக சுகாதாரத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?

Continues below advertisement

அந்த வகையில் மதிப்பீட்டின்படி, 67,597 பக்தர்கள் சன்னிதானம் மற்றும் பம்பையில் உள்ள சுகாதார நிலையங்களுக்குச் சென்று பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளனர். இந்த நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை தெரிவித்தனர். சன்னிதானத்தில் 28,839 பேர் அலோபதி சிகிச்சையையும், 25,060 பேர் ஆயுர்வேத சிகிச்சையையும் தேர்வு செய்துள்ளனர். 1,107 பக்தர்கள் ஹோமியோபதி சிகிச்சையை தேர்வு செய்தனர். பம்பாவில், மொத்தம் 12,591 நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்றனர். பகல்நேர வெப்பநிலை மற்றும் இடைவிடாத லேசான மழையுடன் கூடிய பனிமூட்டம், குளிர்ந்த காலை நேரங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!

கடந்த வாரம் ஃபெங்கல் சூறாவளியால் இப்பகுதி மழை பெய்தது. சன்னிதானம் மருத்துவ குழுவினர் கூறுகையில், திடீர் வானிலை மாற்றங்கள், மலை ஏறும் போது ஏற்படும் உடல் உளைச்சல், அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழன் முதல் பத்தனம்திட்டா மாவட்டத்தில் வானிலையில் மாற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளது மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது.

மருத்துவ உதவியை நாடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் மருத்துவ பதிவுகள் மற்றும் மருந்துகளை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பக்தர்கள் தங்கள் யாத்திரைக்கு சில நாட்களுக்கு முன்பு நடைபயிற்சி போன்ற லேசான உடற்பயிற்சிகளையும் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏறும் போது சோர்வு, பலவீனம், மார்பு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்றவற்றை அனுபவிப்பவர்கள் உடனடியாக  மருத்துவ உதவியை நாடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.