Sabarimala Temple: மாசி மாத பூஜை; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலையில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து ஜன., 21 -ல் நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

Continues below advertisement

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

Continues below advertisement

TN Assembly Session LIVE: சட்டப்பேரவையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிப்பு

 

Sabarimala :  “சாமியே சரணம் ஐயப்பா” .... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை  திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(பிப்.,13) மாலை திறக்கப்படுகிறது. பிப்., 18 வரை பூஜைகள் நடைபெறும். சபரிமலையில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து ஜன., 21 -ல் நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

புதிய மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இன்று வேறு பூஜைகள் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின் தந்திரி மகேஷ் மோகனரரு, ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.

Farmers' Protest 2.0: டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் - குவிக்கப்பட்டுள்ள போலீசார்: 144 தடை, எல்லைகள் மூடல்

இதனைத்தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில்தீபாராதனை, புஷ்பாபிஷேகம். அத்தாழ பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். பிப்., 18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று மாசி ஒன்றாம் தேதி. ஆனால் கேரளாவில் நாளை மாசி ஒன்றாம் தேதி என்பதால் இன்று மாலை நடை திறக்கப்பட்டு நாளை முதல் மாசி பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..

Continues below advertisement
Sponsored Links by Taboola