பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.


சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு எள்ளு அளவிற்கு கூட தகுதி இல்லை - அன்புமணி ராமதாஸ்




சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.


கேரள மாநிலம் பத்தன்திட்டா மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் சபரிமலை கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் லட்சக்கணக்கில் சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். குறிப்பாக இதற்கு அவர்கள் ரயில், சுற்றுலா பஸ், வேன், கார் மூலமும் பயணம் மேற்கொள்கின்றனர்.


Ajith Kumar: அழகாக பந்து வீசிய மகன் ஆத்விக்! அடிக்க நினைத்து மிஸ் செய்த அஜித்! - வைரலாகும் வீடியோ


ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகரஜோதி சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஐயப்பனை தரிசிக்கின்றனர். மாதந்திர நடைதிறப்பின்போதும் தரிசிக்கின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தரிசனத்திற்கு பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும்.




சன்னிதானத்திற்கு தேவையான பூஜை, இதர பொருள்களை டிராக்டரில் கொண்டு செல்வதில் கோயில் நிர்வாகத்திற்கு இடர்பாடுகள் உள்ளது. எனவே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு 2.90 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கென வனத்துறை நிலம் 1.5 ஏக்கர் மட்டுமே தேவைப்படுகிறது. அதற்கு ஈடாக ஏற்கனவே தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சின்னக்கானலில் உள்ள வருவாய்த்துறை நிலம் 4.53 எக்டேரை வனத்துறைக்கு வழங்க தேவசம்போர்டு முன்வந்துள்ளது.


பள்ளிகளில் சாதிக்கு கடிவாளம் போட வேண்டும்; ஆனால்...” - சந்துரு குழு ஆய்வறிக்கையை எதிர்க்கும் அண்ணாமலை


ரோப்கார் செல்லும் பாதையில் 5 இடங்களில் 40 மீ., முதல் 70 மீ., உயரத்திற்கு டவர்கள் அமைக்கப்படுகிறது. இதனால் மொத்தம் 20 மரங்கள் மட்டுமே வெட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரள அரசின் மூலம் தேவசம் போர்டு தந்துள்ள இந்த திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும்  சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.


ரூ.80 கோடியில் அமைக்கப்படும் ரோப் கார் வசதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு அல்ல. பொருட்களை கொண்டு செல்ல மட்டுமேயாகும். இதற்கான கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.