அஜித் குமார்


படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும் நடிகர் அஜித் தனது குடும்பத்திற்கான நேரத்தை எப்போதும் கொடுத்து வருகிறார். அஜித் ஷாலினி தம்பதிக்கு அனுஷ்கா என்கிற 16 வயது மகளும் ஆத்விக் என்கிற 9 வயது மகனும் இருக்கிறார்கள். தனது குழந்தைகளுடன் சைக்கிளிங் போவது அவர்களுடன் ஃபுட்பால் விளையாடுவது என ஒரு தந்தையாக தனது கடமையை நிறைவேற்றி வருகிறார் அஜித் குமார். 


அஜித்தின் மகன் அத்விக் தீவிரமான ஃபுட்பால் ரசிகர். தனது மகனின் ஆசைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆத்விக் பிறந்த நாளின் போது முழுக்க முழுக்க ஃபுட்பால் வீரர்களால் ஆன செட் அமைத்து அவரது பிறந்த நாளைக் கொண்டாடினார்கள் அஜித் ஷாலினி. 






மகனுடன் கிரிக்கெட் விளையாடு அஜித் வீடியோ வைரல் 






தற்போது அஜித் குமார் தனது மகனுடன் சென்னையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆத்விக் பந்து வீச அஜித் பேட்டிங் செய்யும் இந்த வீடியோ அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


விடாமுயற்சி


அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் இந்த மாத இறுதியில் மீண்டும் துவங்க இருக்கிறது, மகிழ் திருமேணி இயக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. அர்ஜூன் , த்ரிஷா , ஆரவ் , ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வரும் தீபாவளிக்கு விடாமுயற்சி படம் வெளியாகும் என படக்குழு உறுதியளித்து வருகிறது. விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது . தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பிரேமலு படத்தில் நடித்த நஸ்லென் இப்படத்தில் அஜித்தின் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கி முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.