மும்முரமாக நடக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பணிகள்

கோபுரங்களில் கலசம் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சை அருகே உள்ள புன்னநைல்லூர் மாயரிம்மன்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

Continues below advertisement

தஞ்சாவூர்: மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் மிக விரைவாக நடந்து வருகிறது. இதில் நேற்று கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

Continues below advertisement

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலில் 21 ஆண்டுகளுக்குப்பிறகு குடமுழுக்கு விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோபுரங்களில் கலசம் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சை அருகே உள்ள புன்னநைல்லூர் மாயரிம்மன்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களுள் இந்த கோயிலும் ஒன்று.

இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். இதற்காக முதல் நாள் நள்ளிரவு முதலே பக்தர்கள் நடந்து கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இங்குள்ள மூலவரான அம்மன் புற்றுமாரியம்மன் ஆகும். இந்த அம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் மட்டும் நடைபெறும்.

இந்த கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) குடமுழுக்கு நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது யாசாலை பூஜை நடைபெறுவதற்காக யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


குடமுழுக்கையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மகாலட்சுமி ஹோமமும், விக்னேஸ்வர பூஜையும் நடைபெற்றது. வரும் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை முதல்காலய யாகசாலை பூஜை தொடங்குகிறது.

குடமுழுக்கையொட்டி புன்னைல்லூர் மாரியம்மன்கோயிலில் உள்ள கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இதில் அம்மன்கோபுரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தப்படுகிறது. இந்த கலசம் புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்படுகிறது. இதே போன்று துர்க்கை அம்மன், பேச்சியம்மன் கோபுரத்திலும் புதிதாக கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் பாலீஷ் செய்யப்பட்டு பொருத்தப்படுகிறது. மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்படுகின்றன.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசம் பொருத்துவதற்காக நேற்று எடுத்துவரப்பட்டு பொருத்தப்பட்டது. அதனை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார். பின்னர் அவர் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுக்ள மற்றும் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். அப்போது கோயில் உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதேபோன்று கோயிலில் உள்ள கொடிமரத்திலும் செப்புக்கவசம் பொருத்தப்படுகின்றன. இந்த கவசம பொருத்தும் பணி தொடங்கி தற்போது முடிவடைந்து புதிய கொடிமரம் போல காட்சி அளிக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola