திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே அக்கரைபட்டியில் காளியம்மன், ஞானவிநாயகர், கன்னிமார், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, சாமி சாட்டுதல் மற்றும் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Metro Rail Parking: நாளை முதல் உயரப்போகும் மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம்.. ஆனால் தள்ளுபடியும் உண்டு... யாருக்கெல்லாம் இந்த சலுகை? முழு விவரம்..




மேலும், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருவிழாவின் பாரம்பரிய நிகழ்ச்சியான பாரிவேட்டை நேற்று மாலையில் நடந்தது. இதில், ஒருவர் புலி வேடம் அணிந்திருந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் வேட்டி அணிந்து, முண்டாசு கட்டியபடி கைகளில் கம்பு, ஈட்டியுடன் வந்து புலி வேடம் அணிந்தவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து பாரிவேட்டை நிகழ்ச்சியை தத்ரூப காட்சியை அரங்கேற்றினர்.


ADMK: முற்றும் வாய் சண்டை! முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? இ.பி.எஸ் தலைமையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்




பண்டைக்காலத்தில் அந்த பகுதி, அடர்ந்த வனமாக இருந்ததால் கிராம மக்கள் தங்களது பாதுகாப்புக்காக விலங்குகளை வேட்டையாடியதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். திருவிழாவில் அக்கரைபட்டி, கம்பிளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை செல்வதுன் திருவிழா நிறைவு பெறுகிறது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண