அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் அமைந்திருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துவதுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்ட உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.


TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சென்ற மாதம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் முத்தமிழ் முருகர் மாநாடு, விநாயகர் சதுர்த்தி தொடர்விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 39 நாட்களில் நிரம்பியது.  இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் முதல் நாள் நேற்று எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஒரு 3 கோடியே 32 இலட்சத்து 50 ஆயிரத்து 873 கிடைத்தது.  


அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..




உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1,237 கிராமும், வெள்ளி 21 ஆயிரத்து 638  கிராமும் கிடைத்தது.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 1,012  ம் கிடைத்தன.  இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  




“நான் வன்னியராக பிறந்தது என் தவறா? என் சாதி உங்கள் கண்களை உறுத்துகிறதா?- அன்புமணி உருக்கம்..!


உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவியர், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது இன்றும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை தொடர்கிறது. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.