திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் 3-ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.


Points Table IPL 2023: முண்டியடித்து முதலிடம் பிடித்த ராஜஸ்தான்.. சென்னை எத்தனையாவது இடம்? புள்ளி பட்டியல் உள்ளே!




அதன்படி கடந்த மாதம் 21, 22-ஆம் தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன் தினம் தொடங்கியது.


TN Corona Spike: மூன்றாவது நாளாக பதிவாகும் உயிரிழப்பு.. வேகமாக பரவும் கொரோனா.. நிலவரம் என்ன? முழு விவரம்..




பங்குனி உத்திர திருவிழா  கடந்த மாதம் 29 தேதி துவங்கி 10 நாட்கள்  நடைபெற்றது.  பங்குனி உத்திர திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான சாமி தரிசனம் செய்து சென்றனர் . பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக 20 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து  உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில்  ரொக்கமாக 4,71,96,703 ரூபாய் கிடைத்துள்ளது.  


Kalakshetra Row: 'வயசான காலத்துல உடம்ப பார்த்துக்கோங்க..' நடிகை குட்டிபத்மினியுடன் மோதும் அபிராமி


தங்கம் 1,098 கிராமும், வெள்ளி 18,622 கிராமும், வெளிநாட்டு கரன்சி 810 நோட்டுகளும் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல்,  தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை தவிர பித்தளை வேல், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


Vitamin D Deficiency : பெண்களிடையே அதிகரிக்கும் விட்டமின் 'டி' குறைபாட்டை தடுக்க ஒரே வழி என்ன தெரியுமா?




உண்டியல் எண்ணிக்கையில் கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலும், துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையிலும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண