அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாட கூடிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய திருவிழாவான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வு  நடைபெற்றது.  அதனை தொடர்ந்து தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏழாம்நாள் திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான  நேற்று தெப்பதேர் நிகழ்ச்சி நடைபெற்றது.


வீடு வாங்க போறீங்களா? இடைக்கால பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!




பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சமேதராக தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இரவு  நிறைவடைந்தது.


Crime: தூங்கிக்கொண்டிருந்த 82 வயது மூதாட்டி: தரதரவென்று இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் - சென்னையில் பயங்கரம்




நேற்று 10ம்  நாள் வார விடுமுறை நாள்  பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் காவடிகள் எடுத்தும் அழகு குத்தியும் முருகன் பக்தி பாடலை பாடியும் , கிரிவலப் பாதையில் குவிந்து வருகின்றனர்.  தெப்பக்குளத்தில் தெப்ப தேரோட்டம் நடைபெறும் அதனை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் தைப்பூச திருவிழா நிறைவடைந்தது.


Defence Budget 2024: பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும்? எதிர்பார்ப்பை கிளப்பும் இடைக்கால பட்ஜெட்..!




Higher Education Reservation: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டில் SC, STக்கான வாய்ப்பு ரத்தா? - மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்


தைப்பூசத் திருவிழா முடிந்து இன்றும் பழனியில் முருக பெருமான தரிசனம் செய்ய தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பழனிக்கு பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர். மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி உற்சாகமாக தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.