பிரசித்தி பெற்ற சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில் ஆண்டு உற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாரியம்மனிடம் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்  என்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு உற்சவ திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டி,  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு உற்சவம் கடந்த ஜனவரி 19 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


February 2024 Bank Holidays: பிப்ரவரியில் பேங்க் போறீங்களா? எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை? கவனியுங்க!




அதனை அடுத்து நாள்தோறும் சுவாமி விதியுலா நடைபெற்று வந்தது. தொடர்ந்து இரண்டாவது வெள்ளிக்கிழமையான இரவு முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நடைபெற்றது. தீமிதி உற்சவத்தை முன்னிட்டு விரதம் இருந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு சக்தி கரம் முன்னே செல்ல ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குழி எதிரே  அம்மன் எழுந்தருளினார்.  தொடர்ந்து  கோயில் கரகம் எடுத்தவர் பூக்குழியில் முதலில் இறங்க, அவரை தொடர்ந்து 500 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். 


ராமர் கோயில் பற்றி ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் இபிஎஸ்க்கு தெரியாது” - அண்ணாமலை




பின்னர் புற்றடி மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புற்றடி மாரியம்மனை வழிபட்டனர். புற்றடி மாரியம்மன் கோயிலின் ஆண்டு உற்சவத்தின் சிகர நிகழ்வாக  10 ம் நாளான இன்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோயிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளின் வழியாக தேரை வடம் பிடித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.


DMK: புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு