அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது. இதையடுத்து பழனிக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்படுகிறது.
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
உண்டியல் எண்ணிக்கை முடிவில் பக்தர்களின் காணிக்கை வரவு ரொக்கம் 5,50,94,743 ரூபாய் கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1,547 கிராமும், வெள்ளி 31,094 கிராமும் கிடைத்தது.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சி நோட்டுகள் 1,207ம் கிடைத்தன. உண்டியல் திறப்பு பணி 27. 3 .2025 மற்றும் 28 .3. 2025 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இந்த உண்டியல் திறப்பில் திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறங்காவலர் பாலசுப்பிரமணி துணை ஆணையர் வெங்கடேஷ் உதவி ஆணையர் லட்சுமி திருப்பூர் துணை ஆணையர் சரிபார்ப்பு அலுவலர் ஹர்ஷினி மற்றும் திண்டுக்கல் உதவி ஆணையர் லட்சுமி மாலா பழனி சரக ஆய்வர், சுவாமிநாதன் திருக்கோவில் மேலாளர் முத்துராமலிங்கம் கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.