வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா.. ரூ. 3 கோடிக்குஏலம் போன ராட்டினம்
ஏலம் எடுக்க யாரும் வராததால் 2-வது முறையாக நடைபெற்ற மறுஏலத்தில் ரூ.2 கோடியே 93 லட்சம் என நிர்ணயித்து ரூ.2 கோடியே 85 லட்சம் என ஏலகேள்விக்கான தொகையை முடிவு செய்தது.
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்திபெற்ற கெளமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி சட்டி, காவடி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் இந்த திருவிழாவை காண தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6-ந் தேதியில் இருந்து மே 13-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
கோவில் திருவிழாவில் பொழுதுபோக்கு விளையாட்டுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏலம் ஏற்கனவே நடத்தப்பட்டது. இதில் ராட்டினம் நடத்துதல் ஏலத்தை ரூ.2 கோடியே 94 லட்சம் என கோவில் நிர்வாகம் நிர்ணயித்திருந்தது. இந்த தொகையில் ஏல கேள்வி யாரும் கேட்காததால், ராட்டினம் ஏலத்தின் போது கோவில் நிர்வாகம் பத்தாயிரம், பத்தாயிரமாக குறைத்து ரூ.2 கோடியே 93 லட்சத்திற்கு தொகை நிர்ணயித்தது. இந்த தொகைக்கும் ஏலம் எடுக்க யாரும் முன் வராததால் ராட்டினம் ஏலம் மறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கண்மலர் ஏலத்தை ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்திற்கு பிரபு என்பவரும், உணவு கூடம் ஏலத்தை ரூ.33 லட்சத்து 14 ஆயிரத்திற்கு சதீஷ்குமார் என்பவரும், முடி காணிக்கை ஏலத்தை ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மாயி என்பவரும் ஏலம் எடுத்தனர்.
IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
இந்த நிலையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான மறுஏலம் கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் கார்த்திகேயன், மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் ராட்டினம் நடத்துதல் ஏலத்தை ரூ.2 கோடியே 94 லட்சம் என கோவில் நிர்வாகம் முதல் முறை ஏலத்தில் நிர்ணயித்திருந்து. இந்த தொகைக்கு ஏலம் எடுக்க யாரும் வராததால் 2-வது முறையாக நடைபெற்ற மறுஏலத்தில் ரூ.2 கோடியே 93 லட்சம் என நிர்ணயித்து ரூ.2 கோடியே 85 லட்சம் என ஏலகேள்விக்கான தொகையை முடிவு செய்தது. இந்த தொகைக்கு யாரும் ஏலக்கேள்வி கேட்கவில்லை. இதனைத்தொடர்ந்து ராட்டினம் ஏலத்திற்கான ஒப்பந்தப்பபுள்ளி டெண்டர்க்கு 11 பேர் டெபாசிட் செலுத்தி இருந்தனர். இதில் 9 பேர் மட்டும் டெண்டர் தொகையை பூர்த்தி செய்து ஒப்பந்த புள்ளி கோரியிருந்தனர். இவற்றில் ராட்டினம் ஏலத்திற்கு ஒப்பந்தபுள்ளி டெண்டரில் அதிகபட்ச ஒப்பந்தபுள்ளி தொகையாக ரூ.3 கோடியே 6 லட்சம் என பூர்த்தி செய்து தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயராஜன் என்பவர் ராட்டினம் நடத்துவதற்கான ஏலத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.