உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் விசேஷ நாட்கள், வாரவிடுமுறை, தொடர்விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால்  பழனியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.


Kalaignar Womens Assistance Registration: கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம்: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்




இதனால் காலை முதலே மலைக்கோவில், அடிவாரம், தரிசன பாதைகள், செல்லும் வழிகள் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக பொது, கட்டண தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சென்று முருகப்பெருமானை தரிசித்தனர். கூட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் . இதேபோல் பழனி கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் ரோப்கார், மின்இழுவை ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.


'கமல்ஹாசன் வாக்குகளை பெற்றுக் கொண்டு தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை' - எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு




EB Special Camp: உங்க மின் இணைப்பில் இருக்கும் பெயரை மாற்ற வேண்டுமா? எப்படி செய்வது? சிறப்பு முகாம்கள் எங்கே நடக்கிறது? முழு விவரம்..


அங்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். பழனி முருகன் கோவிலுக்கு நேற்று நாகை மாவட்டம் ஆய்மூர், கீழக்கொருக்கை பகுதியை சேர்ந்த பக்தர்கள் ரத காவடி எடுத்து வந்தனர். அவர் காவடியுடன் ஆடியபடி பழனி மலையை சுற்றி வந்தனர். இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். இந்த ரத காவடியை பலரும் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண