சப்த கன்னியர்களுள் வாராகி அம்மன் ஒருவராவார். அன்னை ராஜராஜேஸ்வரியின் படைத்தளபதியாக வர்ணிக்கப்படும் வராகி அம்மனை பஞ்சமி அன்று வழிபட்டால், துன்பங்கள் நீங்கி, நோய்கள் விலகி சுபிட்சம் வாழ்வில் ஏற்படும் என்பது ஐதீகம். வராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி அன்று  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். 




அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வராகி அம்மனுக்கு ஆடி மாத பஞ்சமியை  முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவிய பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


Manipur Violence: சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை.. மணிப்பூரில் மீண்டும் கொடூரம்..!




அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீன 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திருக்கடையூர்  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண