தமிழ்நாட்டில் மின்வாரிய பயணாளர்களுக்கு மின் இணைப்பு, பெயர் மாற்றம் மற்றும் வேறு சில பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு மின்வாரியத்தில் வீடு மின் உபயோகதாரர்களும் பொது மின் உபயோகதாரர்கள் தங்களின் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் இன்று (ஜூலை 24 ஆம் தேதி) தொடங்கி நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் இன்று தொடங்கி ஒரு மாத காலம் வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகள் இணையதளத்தில் ஏற்கனவே இருந்து வரும் அனைவரும் பயன்பெரும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக பயனர்கள் தங்களின் மின் இணைப்பு ஆவணங்களுடன் ரு.726 கட்டணம் செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல், விற்பனைப் பத்திரத்தின் நகல், ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்
- நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனைப் பத்திரத்தின் நகல், ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்
- மேலும் இறந்தவர்களின் பெயர்களில் உள்ள மின் இணைப்பினை பெயர் மாற்றம் செய்ய உரிய விண்ணப்பத்துடன் இறப்பு சான்று, வாரிசு சான்று, ஆதார் அட்டை, நடப்பு வீட்டு தேதி வரி ரசீது, இடத்தின் உரிமை சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
- அடுக்குமாடி குடியிருப்பு அல்லது குழு வீடுகளில் இருக்கும் பொது மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யப்பட பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரபூர்வ கடிதம் இணைக்கப்பட வேண்டும்.
ஒரு மாத காலம் நடைபெறும் இந்த சிறப்பு பெயர் மாற்ற முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டு தேவையானவர்கள் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின் வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.