பழனி அருகே ஸ்ரீ ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய முக்கியஸ்தர்கள் ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ்  கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. கர்நாடக நீதிமன்றம் அதிரடி!




அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.


Tamizhaga Vetri Kazhagam: இன்னும் ஒரே ஒரு படம்தான்! சினிமாவில் இருந்து விலகும் நடிகர் விஜய்!




பழனியில் இந்த கோவில் மட்டுமல்லாமல் பழனிக்கு பல்வேறு சிறப்புகளும் உள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்து, முஸ்லிம்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது. இஸ்லாமிய பண்டிகைகளுக்கு இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு அழைப்பு விடுப்பதும். இந்துக்கள் பண்டிகைகளுக்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுப்பதும் பல்வேறு மரியாதை செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.


Vijay Political Party: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?




இந்த சூழலில் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட  பெரிய கலை முத்தூர் ஸ்ரீ ஜகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வருகின்ற 15- 2 -2024 -ஆம் அன்று 12 வருடங்களுக்குப் பின்பு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை  தொடர்ந்து  பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் ஜல்லிக்கட்டு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து தீச்சட்டி எடுத்தும் தீ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக அழைப்பிதழை  அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில்  சமூக நல்லிணக்கத்தோடு அங்குள்ள ஜமாத்தார்க்கு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டது. பழனி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய சம்பவம்  காண்போரை  நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.