மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவேள்விகுடி என்ற கிராமத்தில் பழமையான பிரசித்தி பெற்ற சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடைபெறுவதற்காக வேள்வி நடைபெற்ற பகுதியாக கூறப்படும் இடத்தில் மணவாளேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியவரால் தேவார திருப்பதிகங்கள் பாடல் பெற்ற இந்த ஆலயம் திருமணத்தடை நீக்கும் முக்கிய ஆலயங்களில் ஒன்றாகும். இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.


Naam Tamilar Party: சாட்டை துரைமுருகன் வீட்டில் இருந்து 2 புத்தகங்களை எடுத்துச்சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள்! நடந்தது என்ன?




இதனை முன்னிட்டு, கடந்த 30 -ஆம் தேதி கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் துவங்கின. தொடர்ந்து 14 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வேள்விகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் யாகசாலை பிரவேசம் மற்றும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நான்கு காலையாக சாலை பூஜைகள் நிறைவடைந்து மகாபூர்ணாகுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசங்களை அடைந்தது.


15 ஆண்டாக விலையே தெரியாமல் குறைந்து விலைக்கு காபி விற்பனை; ஏமாறும் மலைக் கிராம மக்கள்




அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கருவறை கோபுரம், ராஜகோபுரம், பரிவார தேவதை கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Rice Price: விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை- ராமதாஸ்


சென்னியநல்லூர் பொன்னம்மா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சென்னியநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா பொன்னம்மா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் மாக கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 29 -ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில், யாகசாலையில் மகா பூர்ணாஹூதி மற்றும் மகாதீப ஆராதனை காட்டப்பட்டு புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டது. 


T20 WC 2024: டி20 உலகக்கோப்பை அரையிறுதி நடக்கும் இடங்கள் திடீர் மாற்றம்! என்ன காரணம்?




தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், கோயிலில் புதிதாக 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பொன்னம்மா காளியம்மன் சிலைக்கும் மகாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


கரூர் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேக விழா