பழனியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்க விழாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். பழனி கோயில் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சைவ மற்றும் வைணவ ஆகம பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்படும். மேலும் தமிழ் இலக்கியம், நீதி நூல்கள், திருக்குறள் உள்ளிட்ட பாடநூல்கள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். தற்போது அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 16 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி
பல்வேறு ஊர்களைச் சேர்ந்த இந்த மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் தங்கி ஒரு வருட காலத்திற்கு பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே கோயிலில் அர்ச்சகராக வேண்டும் என்று விருப்பப்பட்ட மாணவர்களுக்கு தற்போது துவங்கப்பட்டுள்ள பயிற்சி பள்ளி அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கலாகளாம், கோயில்களில் பூஜை செய்யலாம் என்ற சமத்துவத்தை உருவாக்கும் வகையில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பழனி முருகன் கோயிலில் திருமஞ்சனத்திற்கான கட்டண வழக்கு - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த பயிற்சி பள்ளியில் ஒரு ஆண்டுக்கு 40 பேர் பயிற்சி பெற உள்ளனர். பயிற்சி வகுப்பில் அனைத்து சாதியை சேர்ந்த மாணவர்களும் சேரலாம். ஓராண்டு பயிற்சிக்கு பின் அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பழனியில் உள்ள பயிற்சி பள்ளயில் சேலம், தேனி என பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன் கோயில் இணைய ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்