சிவபெருமானுக்கு பல ஊர்களில் பல பெயர்களில் பல திருத்தலங்கள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்த பஞ்ச பூத தலங்களில் நெருப்புக்கு அதாவது அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை ஆகும். அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கினால் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.


நாளை பெளர்ணமி:


அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் அண்ணாமலையார் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்வதும், வணங்கி செல்லும் பக்தர்கள் ஈசனை நினைத்து கிரிவலம் செல்வதும் வழக்கம் ஆகும்.




ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளை வருகிறது. பெளர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் நாளை பக்தர்கள் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு என்பது நம்பிக்கை ஆகும். வழக்கமாக பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.


கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம்:


முழு நிலவு பிரகாசமாக ஒளிக்கும் பௌர்ணமி தினமான நாளை ஓம் நமச்சிவாய எனும் நாமத்தை சொல்லிக்கொண்டே கிரிவலம் வர வேண்டும். கிரிவலம் வருவதற்கு நாளை இரவு 10.58 மணி முதல் மறுநாள் (அதாவது 31-ந் தேதி) காலை 7.05 மணி வரை உகந்த நேரம் ஆகும். இதனால், பக்தர்கள் நாளை பெளர்ணமியில் கிரிவலம் செல்வது உகந்தது என்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பெளர்ணமி என்பதாலும், பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதாலும் திருவண்ணாமலையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கிரிவலம் செல்ல பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


சிறப்பு ஏற்பாடுகள்:




பெளர்ணி என்பதால் நாளை திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிவலத்திற்காகவும், வழிபாட்டிற்காகவும் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் நாளை பூக்கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட திருவண்ணாமலையில் உள்ள கடைகளில் வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாக நடக்கும் என்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.


ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை காண உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: Krishna Jayanthi 2023: ஸ்ரீ கிருஷ்ணர் ஜென்ம தினப்பூஜைக்கு ரெடியா? வீட்டிலே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வது எப்படி?


மேலும் படிக்க: Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு சிலை வாங்கப்போறீங்களா? ப்ளீஸ் இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க..