மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.


EXCLUSIVE: விக்ரம், பிரக்யானுக்கு முடிவுரை? நிலவில் நிரந்தரமாக இருப்பது சாத்தியமா? விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சிறப்புப் பேட்டி




அதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று காலை துவங்கியது. ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார்.  அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது தொடர்ந்து. தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 


9 Years Of Jeeva: கிரிக்கெட்டில் புகுந்து விளையாடும் ஆதிக்க அரசியல்.. 9 ஆண்டுகளை கடந்த ஜீவா படம்..!




பல்லவராயன் பேட்டையில் துவங்கிய தேர் வீதி உலா திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நடைபெற்றது. வீடுகள் மட்டும் வணிக நிறுவனங்களில் வாசலில் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். மேலும்  மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Hero Karizma XMR: முந்துங்கள்..! கம்மி விலையில் கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக் வாங்க 4 நாள் மட்டுமே அவகாசம்: விலையை உயர்த்திய ஹீரோ நிறுவனம்