இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை ஆகும். நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி அக்டோபர் 24-ந் தேதி நிறைவடைகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை துர்கை, சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி தேவிகள் ஒன்றாக சேர்ந்து வதம் செய்ததே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.


கொலு வழிபாடு:


9 நாட்கள் கொண்டாடப்படம் இந்த பண்டிகையில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது கொலு வழிபாடு. நவராத்திரி பண்டிகையை கொண்டாடும் விதமாக வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. வண்ண அலங்கார பொம்மைகளை அடுக்கி வழிபடுவதே இந்த கொலு கொண்டாட்டம் ஆகும்.




கொலு பண்டிகைக்கு 3, 5, 7, 9 என ஒற்றைப் படையில் படிகள் அமைக்க வேண்டும். இதில், எந்த படியில் என்னென்ன வைக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு உயிர்களின் பொம்மையை வைக்க வேண்டும்.


முதல் படி:


முதல் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி ஆகிய தாவரங்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.


2வது படி:


இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.


3வது படி:


மூன்றாவது படியில் கரையான், எறும்பு போன்ற உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.


4வது படி:


4வது படியில் நண்டு, வண்டு போன்ற உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.


5வது படி:


5வது படியில் ஐந்தறிவு ஜீவன்களான மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.


6வது படி:


ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட ஜீவன்களான மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.


7வது படி:


7வது படியில் மனிதர்களில் இருந்து மகான்கள் நிலையை அடைந்தவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். சித்தர்கள், ரிஷிகள் ஆகியோரது பொம்மையுடன் வள்ளலார், ரமணமகரிஷி, விவேகானந்தர் ஆகியோரின் சிலைகளை வைக்க வேண்டும்.


8வது படி:


எட்டாவது படியில் தேவர்கள், அஷ்டதிக்கு பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.


9வது படி:


9வது படியில் முப்பெரும் தேவிகளின் நாயகர்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகியோரது பொம்மைகளை அவரவர் தேவிகளுடன் இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும், விநாயகர், முருகப்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களின் பொம்மைகளும் வைக்க வேண்டும்.


மேலும் படிக்க: October 2023 Festivals: சரஸ்வதி பூஜை, விஜயதசமி.. அக்டோபர் மாதம் என்ன தேதியில் என்ன விசம்? முழு விவரம்


மேலும் படிக்க: Zealandia: 375 ஆண்டுகளாக மாயமான 8ஆவது கண்டம்.. மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்: வெளியான ஆச்சரிய தகவல்