தை முதல் மார்கழி வரை உள்ள ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு கொண்டது ஆகும். இதில் வரும் புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமானது மகாளய அமாவாசை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


மகாளய பட்சம்:


புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி திதி முதல் அமாவாசை தினம் வரை வரும் அந்த 14 நாட்கள் மகாளாய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. மகாளய அமாவாசைக்கு முந்தைய இந்த 14 நாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


நடப்பாண்டிற்கான மகாளய பட்சம் நாளை தொடங்குகிறது. நடப்பாண்டிற்கான மகாளய அமாவாசை தினமானது வரும் அக்டோபர் 14-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்களை வழிபட்டால் அது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


முன்னோர்களுக்கு தர்ப்பணம்:


இந்த மகாளய பட்ச காலத்தில் நாம் எப்போது வேண்டுமானாலும் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். இதன்மூலம் நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பாக ஐதீகம். நாம் செய்யும் சிறிய வழிபாட்டையும் நம் முன்னோர்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.


இன்று மாலை 4.34 வரை பௌர்ணமி திதி இருந்தாலும் இன்றே மகாளய பட்ச காலம் தொடங்கி விட்டதாக சிலர் கூறுகின்றனர். சிலர் மகாளய பட்சம் நாளை முதல் தொடங்குவதாக கூறுகின்றனர். சில பக்தர்கள் அவர்களது முன்னோர்களுக்கு இந்த பௌர்ணமி திதியிலே தர்ப்பணம் அளிக்கின்றனர். நாளை தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்கள் நண்பகல் 12.21 மணிக்கு தங்களது வழிபாட்டை தொடங்கலாம்.


பயன்கள்:


நேற்றைய தினம் புரட்டாசி மாத பௌர்ணமி என்பதால் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. குறிப்பாக, சதுரகிரி கோயில், திருவண்ணாமலை உள்ளிட்ட சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்தனர். திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த மகாளய பட்சத்தில் நமது முன்னோர்களுக்கு நாம் பித்ரு வழிபாட்டை மேற்கொள்வதால் நமது தீவினைகள் அகலும் என்பது நம்பிக்கை ஆகும். நமது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணியங்கள் நம்மையும் தொடரும் என்று இந்து சமயத்தில் நம்பப்படுகிறது. மகாளய பட்ச காலத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால் நம்மை வாட்டி வதைக்கும் தீவினைகள் அகல்வதாகவும் நம்பப்படுகிறது.


மேலும் படிக்க: Navratri 2023 Colours: நவராத்திரி: 9 நாட்கள்...9 நிறங்கள்...எந்தெந்த நாட்களில் என்னென்ன கலர் ஆடைகள் தெரியுமா? இதை பாருங்க!


மேலும் படிக்க: Navratri 2023: 9 நாள் கொண்டாட்டம்; நவராத்திரி பண்டிகை எப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறது? எப்போது? - முழு விவரம்