நவராத்திரி 2023:


இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி (Navratri) பண்டிகையும் ஒன்றாகும். நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். 2023-ஆம் ஆண்டுக்கான நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்குகி அக்டோபர் 24-ஆம் தேதி விஜயதசமி அன்று முடிவடைகிறது. இந்த 9 நாட்களும் விமரிசையாக கொண்டாட்டப்படும். நவராத்திரி பண்டிகையின் சிறப்புகளில், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு  வண்ணத்தை குறிக்கும். முதல் நாள் முதல் ஒன்பது நாள் வரை, அந்தந்த நாளுக்கான நிறத்தில் பெண்கள் ஆடைகள் அணிந்து பராசக்தியின் வெவ்வேறு அவதாரத்தை வழிபட்டு மகிழ்வார்கள். அதன்படி, 9 நாட்கள் எந்தெந்த நிறம்? என்னென்ன வழிபாடு என்பதை இங்கே பார்க்கலாம்.


நவராத்திரி முதல் நாள்:


தேதி: அக்டோபர் 15 (ஞாயிற்று கிழமை)


நிறம்:  வெள்ளை


ஷைலபுத்ரி தேவியை வணங்கு நாள். இந்நாளில் வெள்ளை நிறம் (வெண்மை) தூய்மை, அமைதி, ஒழுக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. நவராத்திரி முதல் நாளன்று வெண்ணிற ஆடைகளை அணிந்து, பராசக்தியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். இதன் மூலம், மன உளைச்சல், குழப்பம், சஞ்சலமான மனம் ஆகியவை நீங்கி, மனம் அமைதி கிடைக்கும்.


நவராத்திரி இரண்டாம் நாள்:


தேதி: அக்டோபர் 16 (திங்கள் கிழமை)


நிறம்:  சிவப்பு


பிரம்மச்சாரிணி தேவியை வணங்கும் நாளில் சிவப்பு நிற ஆடையை அணிவது நல்லது. சிவப்பு நிறம் ஆற்றலை குறிக்கிறது. அதோடு இல்லாமல் ஒரு விஷயத்தில் நாம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதை சிவப்பு நிறம் குறிக்குது.  அம்மனுக்கு சிவப்பு நிறம் மிகவும் உகந்தது.


நவராத்திரி மூன்றாம் நாள்:


தேதி: அக்டோபர் 17 (செவ்வாய் கிழமை)


நிறம்: அடர் நீலம்


சந்திகாண்டா தேவியை வணங்கும் நாளில் ராயல் ப்ளூ என்று சொல்லப்படும் நல்ல அடர்த்தியான நீல நிறத்தில் ஆடைகள் அணியலாம். அடர்  நீலம் என்பது தெளிவையும், செழுமையையும், அமைதியையும் குறிக்கிறது.


நவராத்திரி நான்காம் நாள்:


தேதி: அக்டோபர் 18 (புதன்கிழமை)


நிறம்: அடர் மஞ்சள்


குஷ்மான்டா தேவி நாளில்  அடர் மஞ்சளை பெண்கள் அணிந்து வழிபடலாம். இந்நாளில் மங்களகரமான மஞ்சள் நிறம் அணிந்தால், மகிழ்ச்சி, ஆனந்தத்தை குறிக்கும்.  இந்நாளில், வலிமை, ஆரோக்கியம், அதிர்ஷ்டத்தை பெற வாய்ப்புள்ளது.


நவராத்திரி ஐந்தாம் நாள்:


தேதி: அக்டோபர் 19 (வியாழன் கிழமை)


நிறம்: பச்சை


ஸ்கந்தமாதா தேவியை வணங்கும் இந்நாளில் பச்சை நிற ஆடையை அணியலாம். செழிப்பு, இயற்கை, வளர்ச்சி, மனதை அமைதிப்படுத்தும் சூழல் ஆகியவற்றை பச்சை நிறம் குறிக்கிறது. வாழ்வின் புதிய தொடக்கத்தையும் பச்சை நிறம் குறிக்கிறது. பச்சை நிற ஆடைகளில் அம்பாளுக்கு பூஜை செய்தால், உங்கள் வாழ்வில் நிம்மதியும், செழிப்பும் நிலைத்து நிற்கும்.


நவராத்திரி ஆறாம் நாள்:


தேதி: அக்டோபர் 20 (வெள்ளிக்கிழமை)


நிறம்:  சாம்பல்


காத்யாயனி தேவியை வணங்கும் இந்நாளில் சாம்பல் நிற ஆடைகளை அணியலாம். தைரியம், தீர்மானம், நீதி, அச்சமின்மை ஆகியவற்றை சாம்பல் நிறம் குறிக்கிறது.  சாம்பல் நிறம், தீமையை எதிர்த்து போராட உதவுகிறது.


நவராத்திரி ஏழாம் நாள்:


தேதி: அக்டோபர் 21 (சனிக்கிழமை)


நிறம்:  ஆரஞ்சு


நவதுர்கை தேவியை வணங்கும் நாளில் ஆரஞ்சு நிற ஆடைகளை அணியலாம். ஆரஞ்சு நிறத்தில் நவதுர்கை தேவியை வழிப்படுவது மிகவும் நல்லது. ஈர்ப்பு, அரவணைப்பு, உற்சாகம் போன்ற குணங்களை கொண்டுள்ளது ஆரஞ்சு நிறம். 


நவராத்திரி எட்டாம் நாள்:


தேதி: அக்டோபர் 22 (ஞாயிற்று கிழமை)


நிறம்:  மயில் பச்சை


மஹா கௌவுரியை வணங்கும் இந்நாளில் மயில் பச்சை நிற ஆடைகளை அணியலாம். மயில் பச்சை மிக அழகான நிறங்களில் ஒன்று. மயில் பச்சை நிறம் எல்லோருக்கும் அழகான, நளினமான தோற்றத்தை கொடுக்கும். இது தனித்தன்மையையும் குறிக்கும் நிறமாகும். இந்த நாளில் மஹா கௌவுரியை வணங்குவது உகந்ததாக இருக்கும்.


நவராத்திரி ஒன்பதாம் நாள்:


தேதி: அக்டோபர் 23 (திங்கள் கிழமை)


நிறம்:  பிங்க்


சித்திதாத்ரி தேவியை வணங்கும் இந்நாளில் பிங்க நிற ஆடைகளை அணிய வேண்டும். இந்த அழகான ரம்மியமாக இருக்கும்.  அன்பு, காதல், நேசம் ஆகியவற்றை பிங்க நிறம் குறிக்கும். 


நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்காதேவிக்காக வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த 3 நாட்களும் துர்காதேவியின் ஆட்சிக்காலம் ஆகும். இதில் துர்காதேவிக்கு வழிபாடு செய்யப்படுகிறது. வீரத்தை அளிப்பதற்காக இந்த நாட்களில் பூஜைகள் நடத்தப்படுகிறது. அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. செல்வத்தை தரும் லட்சுமி தேவியின் ஆட்சிக்காலம் இதுவாகும். கடைசி 3 நாட்கள் கல்விச்செல்வத்தின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கான வழிபாடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.