உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோயிலின் உற்சவ விழாவை முன்னிட்டு - 500க்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.






மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ளது, க்ஷத்திரியகுல இந்து நட்டாத்தி நாடார் மற்றும் சிவகாசி இந்து நட்டாத்தி நாடார் உறவின்முறைகளுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி உற்சவ திருவிழா 4 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்., இந்த ஆண்டு திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, 3ஆம் நாளான நேற்று தில்லைநாயகபுரம் மேற்கு காளியம்மன் கோயிலில் இருந்து பத்திரகாளியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்தார்.




இந்த வீதி உலாவின் போது சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேவர் சிலை, தேனி ரோடு வழியாக ஊர்வலமாக பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்தடைந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வந்த இந்த முளைப்பாரி ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் சுமார் 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MS Dhoni: இறுதி போட்டியில் களமிறங்கும் ’தல’.. தோனிக்கு தடை இல்லை..? ஒரு Fact Check இதோ..


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: வழியில் கிடந்த பணப்பையை போலீஸிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் - தேவகோட்டையில் நெகிழ்ச்சி









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண