சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளி மயில். இவர் தேவகோட்டையில் ஒரு வணிக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தென்காசி கல்லூரியில் படித்து வரும் தனது மகனின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக, 68 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, அதனை வங்கியில் செலுத்துவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப பணத்தைப் பார்த்த போது பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், பை கிடந்த பகுதியில் சவாரி சென்ற ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் அதனை எடுத்து பார்த்தபோது அதில் 68 ஆயிரம் ரூபாய் பணம், ஆதார் அட்டை, போன்ற ஆவணங்கள் இருந்துள்ளது. உடனடியாக தேவகோட்டை டவுன் காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ஆய்வாளர் சரவணன் இடம் பையை ஒப்படைத்தார்.
பையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட வள்ளி மயிலை காவல் நிலையத்திற்கு அழைத்து பணத்தை அவரிடம் ஆய்வாளர் ஒப்படைத்தார். மகனின் படிப்பு செலவிற்கு அனுப்ப வேண்டிய பணம் தவறவிட்ட நிலையில், திரும்பவும் கிடைத்ததால், மகிழ்ச்சியடைந்த வள்ளி மயில் ஆட்டோ ஓட்டுனருக்கும், ஆய்வாளர் சரவணனுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை பாராட்டி காவல் நிலைய வாயில் வரை வந்து கண்ணனை வழி அனுப்பி வைத்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: மதுரை தெப்பக்குளத்தில் பாதுகாப்பு உடைகள் இன்றி படகு சவாரி - ஆபத்தை ஏற்படுத்தும் பயணம்
மேலும் செய்திகள் படிக்க - ஜூன் முதல் வாரத்தில் 500 நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையத்தை ஒரே நாளில் முதல்வர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்