உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.



மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த,  ஆனையூரில் அமைந்துள்ளது பழமையான  மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்., இந்த திருக்கோயிலில் மார்கழி பௌர்ணமி ஆருத்ரா தரிசன வைபவத்தை முன்னிட்டு நடராஜர் - சிவகாமியம்மன் மற்றும் மாணிக்கவாசகர்-க்கு பால், சந்தனம், தயிர், பன்னீர் என பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.,



 

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் நடராஜரும், சிவகாமியம்மனும் காட்சியளித்தபடி ஆருத்ரா தரிசனம்  மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடும் வைபவம் நடைபெற்றது., முன்னதாக கோவிலின் மூலவரான ஐராவதேஸ்வரர் மற்றும் மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்கராம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்., இந்த ஆருத்ரா தரிசன வைபவத்தில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 


 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண