காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பெய்து வந்தது. இதனால் காவேரி ஆற்றில் நீர்வரத்து மாறி, மாறி அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6500 கன அடியாக குறைந்து வந்தது. இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து மேலும் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்குப் பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 6500 கன அடியிலிருந்த வினாடிக்கு 5000 கன அடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிறகு நீர் வரத்து குறைந்து இருந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

 



மேலும் நீர்வரத்து குறையாமல் ஒரே சீராக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ், சமையல் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



 

 

தருமபுரியில் உள்ள  பிரசித்தி பெற்ற மிகப் பழமையான கோட்டை சிவாலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



 

ஆருத்ரா தரிசன விழாவை வெட்டி தமிழக முழுவதும் உள்ள சிவன் ஆலயத்தில் விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகாஜீன சுவாமி கோவிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி இன்று காலை சுவாமிக்கு பால், பன்னீர், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசன காட்சியும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இந்த ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சி  வழிபாட்டில், தருமபுரி நகர் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தருமபுரியில் உள்ள கோட்டை மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை காண்பதற்காக அதிகாலை முதலிலேயே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக, கோவில் நிர்வாகம் சாராபில் வழங்கப்பட்டது.