நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை கொண்டாட வீடுகளில் பலகாரங்கள் செய்வது புதிய ஆடைகள் வாங்குவது, பட்டாசு என நாளைய தீபாவளியை அமர்க்களப்படுத்தினர் பொதுமக்கள். பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுகளையும் அள்ளி வழங்கின.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 60 வயதான அபயாம்பிகை என்ற யானை கடந்த 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. விழாக்காலங்களில் உற்சவ மூர்த்தி புறப்பாட்டின்போது சுவாமிக்கு முன்னர் யானை அபயாம்பாள் சென்றால் தான் விழா களைகட்டும். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களின் 50 ஆண்டுகளாக செல்லப் பிள்ளையாக அபயாம்பிகை யானை வலம் வருகிறது. காலில் கொலுசு, குளிப்பதற்கு மிகப்பெரிய ஷவர், யானை கொட்டகையில் காற்று வருவதற்காக ராட்சச மின்விசிறி, என என இந்த யானைக்கு பல்வேறு வசதிகளை பக்தர்கள் ஏற்படுத்தி ஏற்கனவே ஏற்படுத்தி தந்துள்ளனர். 


Diwali 2022 : தீபாவளியன்று வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றவேண்டும்? எந்தெந்த இடங்களில் ஏற்றினால் சிறந்த பலனைத் தரும்?




இந்நிலையில் சென்னையைச் சார்ந்த கர்நாடக இசை பாடகி, அபூர்வா ராமசேஷன் சார்பில் யானைக்கு தீபாவளியை முன்னிட்டு இன்று 20000 ரூபாய் மதிப்பில் புதிய உடை வழங்கப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தொடர்ந்து யானை அபயாம்பிகைக்கு கஜ பூஜை செய்யப்பட்டது. இதனை அடுத்து யானைப்பாகன்கள் செந்தில் மற்றும் வினோத் ஆகியோர் யானைக்கு முகபட்டம் எனப்படும் முன்னலங்காரம், உடலை சுற்றி ஓம் என்ற எழுத்து ஜரிகையால் பொறிக்கப்பட்ட உடல் போர்வை, கழுத்தில் வஸ்திரம் காலில் அலங்கார பட்டைகள் ஆகியவை அணிவிக்கப்பட்டு தீப ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காய்கறிகள் மற்றும் பழங்களை பக்தர்கள் உணவாக வழங்கி யானையுடன் தீபாவளியை கொண்டாடினர்.


Diwali 2022 : தங்கம், வெள்ளி நகைகள் பளிச்சிடணுமா? மத்தாப்பு தீபாவளி ஜொலிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற