மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 


சமீபத்திய புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் பகுதி முன்பு பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வாலயத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழா செய்ய அப்பகுதி பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் முடிவெடுத்தனர்.


சொற்பொழிவு சர்ச்சை; அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி - பள்ளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை




கோயில் திருப்பணி 


அதனை அடுத்து குடமுழுக்கு விழாவிற்கான பூர்வாங்க பணிகளை பக்தர்களின் பங்களிப்புடன் தொடங்கி, கோயில் கட்டிடம் புதுப்பித்தல், சிலை வடித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள்ளை மேற்கொண்டனர். தொடர்ந்து திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்றது குடமுழுக்கு விழாவிற்கு நாள் குறித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கோலாகலம் நடைபெற்றது. 


GOAT Collection: தொடரும் ஹவுஸ்புல்! விஜய்யின் கோட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?




பூர்வாங்க பூஜைகள்


கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முன்னதாக கடந்த 5 -ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் விழா துவங்கியது. பின்னர் இரண்டு காலயாக சாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை நிறைவுற்று மஹா பூர்ணாகுதி செய்யப்பட்டது, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் கோபுர கலசத்தை அடைந்தனர். 


Cristiano Ronaldo:900 கோல்.. "தி கோட்"என நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை




 


விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம், மாவட்ட ஆட்சியர் 


அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலையில் வைத்து பூஜக்கப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர் சன்னதியின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Vinayagar Chaturthi 2024: திருச்சி: விநாயகர் சிலை கரைப்பதற்கு கட்டுப்பாடு; மீறினால் நடவடிக்கை