இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி:
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்ததி திதியிலே விநாயகர் அவதரித்தாக கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பூஜையில் விநாயகர் சிலை அல்லது விநாயகர் படத்தை வைத்து வணங்குவதுடன் வாழை இலையில் படையலிட்டு பழங்கள், பூக்கள் வைத்து வணங்குவதும் வழக்கமாக உள்ளது.
21 பூக்கள்:
விநாயகர் சதுர்த்தி தினத்தில் 21 பூக்கள், 21 பழங்கள் மற்றும் 21 இலைகள் வைத்து வணங்குவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் எனறு நம்பப்படுகிறது. அந்த 21 பூக்கள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.
- மல்லி
- முல்லை
- ஜாதிமல்லி
- சாமந்தி
- சம்பங்கி
- தாமரை
- செண்பகம்
- பாரிஜாதம்/ பவளமல்லி
- அரளி
- வில்வ பூ
- மனோரஞ்சிதம்
- தும்பை
- எருக்கம்பூ
- தாழம்பூ
- மாதுளம்பூ
- மாம்பூ
- செம்பருத்தி
- ரோஜா
- நந்தியாவட்டை
- ஊமத்தை பூ
- கொன்றை மலர்
விநாயகர் சதுர்த்தி பூஜையில் இந்த 21 மலர்களை வைத்து வணங்கினால் அதுவரை வீட்டில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இந்த அனைத்து பூக்களும் கட்டாயம் வைத்து வழிபட வேண்டும் என்ற அவசியமில்லை. பக்தர்கள் தங்களால் இயன்ற பூக்களை வைத்து வழிபட்டாலே சிறப்பானதாக கருதப்படுகிறது. விநாயகருக்கு மிகவும் உகந்ததாக எருக்கம் பூவும், அருகம்புல்லும் விளங்குவதால் இந்த இரண்டும் பூஜையில் இருக்குமாறு பார்த்துக்கொண்டாலே சிறப்பாகும்.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.