மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 




மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோவிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.


IPL 2023 SRH vs RR: ஹைதராபாத் vs ராஜஸ்தான் : ஆட்டத்தை மாற்றப்போகும் வீரர்கள் யார் யார்? - வாங்க பார்க்கலாம்




இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில்  பிரமோற்சவ திருவிழா மார்ச் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விநாயகர், செல்வ முத்துக்குமார சுவாமி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட நான்கு தேர்தல் அடுத்தடுத்து நிலையில் இருந்து புறப்பட்டு வீதியுலா சென்றது. 


TN Rain Alert : தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?




திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 4 தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மேலும் வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள், வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் நான்கு மாடவீதிகளில் வழியாக  வலம் வந்து இறுதியில் நிலையை அடைந்தது.


SRH VS RR : பலம்கொண்ட ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதல்.. புள்ளி விவரங்கள், வெற்றி வாய்ப்பு இதுதான்..!


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற