ஆதி பரமேஸ்வரி அல்லது ஆதி பராசக்தியின் சக்தி ஸ்வரூபம். மகிஷனை அழித்த மகிஷாசுர மர்த்தினியின் குதிரைப் படை தலைவி - இப்படி பலரும் வராஹி கோபத்தின் ரூபமாக இருப்பவள்.  அன்பிலே, ஆதரவிலே அன்னைக்கு நிகரானவள். வராஹி அம்மன் வழிபாடு குறித்தும், அதன் வரலாறு குறித்தும்  விளக்கு கடை போரூர் ராஜலெட்சுமி சிவசங்கரன் பகிர்ந்துகொள்கிறார்.


வராஹி அம்மன் வழிபாடு ஏன்?


ஒவ்வொரு தெய்வத்தும் ஒரு காலகட்டம் இருப்பதாக சொல்வதுண்டு. ராமகிருஷ்ண பரமஹம்சர் காலத்திற்கு முன், காளியம்மன் வழிபாடு என்பது நம்மிடம் இருந்தது இல்லை. வீட்டில் காளி பூஜை செய்யும் வழிபாடு என்பது இல்லை. காளி என்பவள் மாந்திரீகர்கள்  வழிபடும் ஒன்றாக கருதப்பட்ட காலம் உண்டு. ராமகிருஷ்ண பரமஹம்சர் காலத்திற்கு பிறகு கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் காளி வழிபாடு தொடங்கியது எனலாம். அதன்பிறகு காளியம்மனை வீடுகளில் வைத்து வழிபடும் பழக்கம் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. 


ஆங்கிலேயே காலத்தில் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் வழிபாடு அதிகமாக இருந்தது. 2018-ஆம் ஆண்டு முதல் வராஹி வழிபாடு புகழ்பெற தொடங்கியது. இராஜராஜ சோழன் காலத்தில் வராஹி வழிபாடு எப்படி தோன்றியது, வராஹி அம்மனுக்கும் ராஜராஜ சோழனுக்கு என்ன தொடர்பு உள்ளிட்டவைகள் பற்றி ராஜலெட்சுமி சிவசங்கரன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொள்கிறார். 


வராஹி


ராஜராஜ சோழன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தவம் மேற்கொள்கிரார். அகத்திய முனிவர் அசரீரியாக சில விசயங்களைச் சொன்னதாக புராணங்களில் கதை உண்டு.அப்போது அவருக்கு கிடைத்த உருவரும் வராஹி என்று சொல்லப்படுகிறது.


தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டதிலும் வராஹியின் பங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது. இராஜராஜ சோழன் கோயிலுக்காக இடத்தை தேர்வு செய்ய திட்டமிடுவது குறித்து சிந்தித்தபோது அதற்கு உறுதுணையாக இருந்தது வாராஹிதான் என்று சொல்லப்படுகிறது. 


தஞ்சை பெரிய கோயில்:


ஒரு நாள் ராஜராஜ சோழன் தனது குதிரையில் சென்று கொண்டிருந்தபோது, அவர் சென்ற வழியில் ஒரு காட்டுப்பன்றி வழிமறித்தது. உடனே, அதை விரட்டி செல்ல திட்டமிடுகிறார்; அப்படியே செல்கிறார். ஏற்கனவே ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை எங்கு அமைப்பது குறித்த குழப்பத்தில் இருந்தார். காட்டுப்பன்றியை பின்பற்றி சென்றவருக்கு அதற்கான பதில் கிடைத்தது. தற்போது தஞ்சை பெரிய கோயில் அமைந்துள்ள இடத்தில் காட்டுப்பன்றி தன் காலால் தட்டி அந்த இடத்தை சுட்டிக்காட்டியதாம். அப்போது,ராஜ ராஜ சோழன் புரிந்துகொண்டார்; அதன்படியே, பெரிய கோயிலை கட்டினார். இந்தக் கதையை அவரது குருஜி சொன்னதாக இராஜலெட்சுமி சொல்கிறார். 


அதன்பிற்கு பல்வேறு காரணங்களால் வராஹி வழிபாடு இல்லாமல் போனது. அதன்பிறகு நாட்டில், தஞ்சை பெரிய கோவில்  காசியில் வராஹி அம்மன் கோயில் என இரண்டு மட்டும் இருந்ததாக சொல்லப்படுகிறது.


மிக பெரிய ஆரவாரமில்லாத வழிபாடே வராஹி அம்மனை மகிழ்விக்கும் என்கிறார் இரஜலெட்சுமி. அதாவது அகல் விளக்கேற்றி மனதார வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்; நினைத்தது நடக்கும் என்று சொல்கிறார்.வாரஜி அம்மனை வழிபடுவதால் பல நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கையில் எதிர்மறையான எண்ணங்களை நீக்கி நல்வழிப்படுத்தும் வழிபாடாக வராஹி அம்மன் இருப்பதாக அவர் தனது அனுபவங்களை கூறியுள்ளார்.


வாரஹி வழிபாடு குறித்து இராஜலெட்சுமி கூறுகையில்,” அம்மன் விக்ரஹமாக பலரின் வீடுகளுக்கு செல்கிறாள். தினமும் அபிஷேக ஆராதனைகள் இருப்பது அவசியம் என்றில்லை. அதெல்லாம் இல்லாமலும், விளக்கேற்றி பூக்களோடு வழிபடலாம் என்பது இவளின் சிறப்பு. ஆண், பெண் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் வராஹி அம்மனுக்கு அபிசேகம் செய்யலாம் என்ற நிலை வராஹி வழிபாட்டில் மட்டுமே உள்ளது. இது வராஹி யுகம்.” என்று கூறும் ராஜலெட்சுமி, வராஹி அம்மனை மனதால் நினைத்தால் அவள் வழிநடத்துவாள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.