மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரிதுலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  இந்தாண்டு துலா உற்சவம் பார்வதி தேவி மயில் உருவில் சிவனை பூஜித்து சாபவிமோசனம் அடைந்த மாயூரநாதர் ஆலயம் மற்றும் வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்ச்சவம் நடைபெற்று வருகிறது.


Latest Gold Silver Rate November13, 2023: மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை.. கலக்கத்தில் நடுத்தர மக்கள்...




ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் கங்கைக்கு மாயூரநாதர் சுவாமிகளும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சியளித்தாக வரலாறு கூறுகிறது. இதனை முன்னிட்டு அமாவாசை தீர்த்தவாரி  மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு, காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். அதனை தொடர்ந்து ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அயபாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி,  அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசிவிஸ்வநாதர், ஐப்பசிமாத அமாவாசையொட்டி வதானேஸ்வரர் கோயிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினார்.


Rain Alert: கனமழை எச்சரிக்கை - 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம் - வருவாய்த்துறை தீவிரம்




பின்னர் அஸ்திரதேவருக்கு இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனங்களின் கடட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி (துலா) மாதஅமாவாசை அன்று ஒருநாள் மட்டும் வீதியுலாவாக காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி வருகிற 16 -ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.


Bigg Boss Tamil: பூர்ணிமாவுக்கு ரொம்பதான் தைரியம் .. உள்ளே இருந்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கடும் விமர்சனம்..!