மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திருவாவாடுதுறை ஆதீனம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். இங்குள்ள காவிரிக்கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததால் சிவன் மயிலாக உருவம் கொண்டு பார்வதிதேவியுடன் சேர்ந்து மயூரதாண்டவம் ஆடி மயில் உருநீங்கி சுயஉரு பெற்றாள் என்பது ஐதீகம்.
Rain Alert: கனமழை எச்சரிக்கை - 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம் - வருவாய்த்துறை தீவிரம்
ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் காவிரியில் புனித நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொண்டதாகவும் புராணம் கூறுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி 1 -ம் தேதி முதல் மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், படித்துறை விஸ்வநாதர் ஆலயம், அய்யாரப்பர் ஆலயம், காசி விஸ்நாதர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கடந்த 7 -ம் தேதி கொடியேற்றபட்டு தீர்த்தவாரி நடைபெற்ற வருகிறது.
7-ம் திருநாளான நேற்று அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்று இரவு மாயூரநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மாயூரநாதர் - அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து ஊஞ்சள் உற்சவம் மாலை மாற்றுதல் நடைபெற்று பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். சிவாச்சாரியார்கள், வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. தொடாந்து பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாரதனை மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
Children's Day 2023: ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”.. தேசிய குழந்தைகள் தினம் இன்று..!