மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மும்மூர்த்தி விநாயகர் (பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்) கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பழமை வாய்ந்த மும்மூர்த்தி விநாயகர் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மும்மூர்த்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய  பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபமாக இந்த  மும்மூர்த்தி விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அருள்பாலித்து வருகிறார். 


Sabarimala: சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா? செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!




கோயிலின் சிறப்புகள் 


இந்த விநாயகரை வழிபடுபவர்களுக்கு மன அமைதியும், உஷ்ண சம்பந்தமான வியாதிகள் அகலும், உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்பதும், திருமண தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலை பழமை மாறாமல் புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா செய்திட அவ்வூர் மக்கள் முடிவெடுத்தனர். 


Border Gavaskar Trophy: அலாரம் வைக்க ரெடியா.. நாளை தொடங்கும் BGT தொடர்.. நேரலையை எங்கு காணலாம்?




திருப்பணி 


அதனைத் தொடர்ந்து ஊர்மக்கள் பல்வேறு தரப்பினரின் பங்களிப்புகளுடன் கோயில் திருப்பணிகளை பாலாலயம் செய்து தொடங்கினர். தொடர்ந்து கோயில் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு, புதிய சிலை வடித்து, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறிக்கப்பட்டு கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. 


Salary Gk: ராணுவம் Vs துணை ராணுவம் Vs காவல்துறை - எதில் அதிக ஊதியம் கிடைக்கும்? விவரம் இதோ..!




கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் 


கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் 17 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், கணபதி ஹோமம் தொடங்கி கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து, யாக குண்டங்கள் அமைத்து கடந்த 18 -ஆம் தேதி, முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.


IND VS AUS : "என்ன திமிர் இருக்கனும்.." இந்திய வீரர்களை மட்டம் தட்டிய கம்மின்ஸ்.. கிழித்து தொடங்கவிடும் ரசிகர்கள்




மகா கும்பாபிஷேகம் 


பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிநீர் அடங்கிய கடங்களை மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத, புனித நீரானது கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக செய்யப்பட்டது. பின்னர் மூலவர் மும்மூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.


Vidaamuyarchi: சபரிமலையில் விடாமுயற்சி டீசர் கேட்ட AK பாய்ஸ்! அஜித் ரசிகர்கள் அட்டகாசம்!