காட்டுச்சேரி பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா சம்ப்ரோஷண பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவத் அனுக்ஞை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகளுடன் விழா துவங்கி நடைபெற்று வந்தது.
யாகசாலை பூஜை
அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணகுதி நடைபெற்றது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள தாள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி ஊர்வலமாக ஆலயத்தை சுற்றி வந்து, கோபுர கலசத்தை வந்தடைந்தது.
முழங்கிய கோவிந்தா கோவிந்தா முழக்கம்
அதனை அடுத்து கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா சம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தரங்கம்பாடி சுற்று வட்டார இதில் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
“நாங்க கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்” - பண மோசடி செய்ய முயன்ற தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை