காஞ்சிபுரம் ஆதி காமாட்சி எனப்படும் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


ஆதி காமாட்சி அம்மன் ( kanchipuram adhi kamakshi temple )


காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த ஶ்ரீ ஆதி காமாட்சி அம்மன் என்னும் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜைகள். இம்மாதம் 7 ஆம் தேதி அனுக்கை, கணபதி பூஜையுடன் தொடங்கின. மறுநாள் நவக்கிரக ஹோமம் மூர்த்தி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.




 


மகா கும்பாபிஷேகம் - kumbabishekam  


இதனை தொடர்ந்து இன்று ஆறாம் கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நிறைவு பெற்ற பிறகு புனித நீர்க் குடங்கள்சிவாச்சாரியார்களால் கோபுரங்களுக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவர் காளிகாம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


 




 


கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன, விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், கோவில் அறங்காவலர்கள் குழுவினர், திருக்கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீரை தெளித்து சாமி தரிசனம் செய்தனர்.  இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. வான வேடிக்கைகளும் நடைபெற உள்ளது.


ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில்


ஆதி காமாட்சி அம்மன் என அழைக்கப்படும், ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் இடையே அமைந்துள்ளது. அசுரர்கள் தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என பூலோகம் வந்து, அம்பிகையை வேண்டி தவம் இருந்தனர். அசுரர்களை அழிக்க அம்பிகை காலை வடிவம் கொண்டதால் இந்த கோயிலுக்கு காளி கோட்டம் என்ற பெயரும் உண்டு . 





பண்டன் என்ற அசுரனை சிறுமி வடிவம் கொண்டு, அம்பிகை அழைத்த பிறகு தேவர்களுக்கு காஞ்சிபுரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். கருணை கொண்ட கடவுள் என்பதால் காமாட்சி என பெயர் பெற்றார். இக்கோயிலில் நுழைவு வாயிலில் ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபமும் கொடி மரமும் அமைந்துள்ளது ‌. கருவறை அருகே உள்ள ஸ்ரீ சர்க்கரை இயந்திரத்திற்கு நாள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வருகிறது. அம்மன் கோயில் என்பதால் துவார பாலகிகள் பாதுகாப்பிற்கு இருக்கும் சிற்பங்களும் காட்சியளிக்கின்றன .


அர்த்தநாரீஸ்வர லிங்கம்


இந்த லிங்கத்திற்கு சக்தி லிங்கம்  என்று அழைக்கப்படுகிறது. திருமணம் தடை நீங்க விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சக்தி லிங்கத்திற்கும் ஆதி காமாட்சி விளக்கும் அபிஷேகம் செய்தால்,  விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.  பிரிந்து தம்பதிகள் மீண்டும் இணையவும் திருமணமானவர்கள் ஒற்றுமையாக வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நெய்வேத்தியம் செய்து வணங்கலாம்.