மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமிதேவி சமேத சுந்தர நாராயண பெருமாள் ஆலயங்கள் அமைந்துள்ளது. நந்தி தேவரின் சிஷ்யரான திருமூலர் என்ற சித்தர் கொள்ளிடம் நதியின் தென் கரையில் மல்லிகை பூக்கள் நிறைந்த பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து, கைலாசநாதர் அருளைப் பெற்ற தலம் சித்தமல்லி கிராமம் என தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இதே போல் வேண்டியவருக்கு வேண்டும் வரங்கள் அனைத்தும் தந்து எட்டரை அடி உயரத்தில் தாயாருடன் விஸ்வரூ பமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத சுந்தரநாராயண பெருமாள் கோயில் காவேரி ஆறு உத்தரவாஹினி தீர்த்தக்கரையில் அமைந்துள்ளது. இவ்இரு ஆலயங்களின் மகாகும்பாபிஷேக விழா  இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி யாக கால பூஜைகள் தொடங்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.


CM Stalin on Dravidian Model: ‘திராவிட மாடலே இந்தியாவின் ஆட்சி நிர்வாக ஃபார்முலா’ - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்




இன்று கும்பாபிஷேக தினத்தை  முன்னிட்டு ஆறாவது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து   யாக சாலையில் பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு,  பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள், மங்கள சின்னங்கள் முன்செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்க புனித தீர்த்தம் கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து  புனித நீரை கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தாகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


POCSO Crime : டியூஷன் படிக்க வந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு - கணக்கு ஆசிரியை போக்சோவில் கைது




மேலும் பாதுகாப்பு கருதி  திருவாரூர் தியாகராஜர் ஆலய பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த கோயில் உற்சவர் சிலைகள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மீண்டும் 23 ஆண்டுகளுக்கு பின்னர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டுள்ள  நிகழ்வுகள் அப்பகுதி பக்தர்களிடம் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. ‌


Trichy Airport: தங்க கடத்தல் கூடாரமாக மாறிய திருச்சி விமான நிலையம் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண