திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி (வயது 40). இவர் துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதையொட்டி இவர் துறையூர் பகுதியில் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவரும், அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரிடம் டியூசன் படித்த 10-ம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர், தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். அப்போது இரவு நேரங்களில் அந்த மாணவர், ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும், படிப்பில் கவனமில்லாததும், அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அந்த மாணவர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழ்நாடில் மாணவர்கள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குறிப்பாக வருங்கால சமுதாயத்தை தீர்மானிக்கவும், மேம்படுத்தவும் மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க ஆசியர்கள் தான் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆசியர்கள் மாணவர்களிடம் ஆசைவார்த்தை கூறி தவறான வழியில் நடத்துகிறார்கள். இதனால் மாணவர்கள் சமுதாயமே நாசமாக போகிறது. மேலும் சில ஆசிரியர்கள் தவறு செய்வதால் மற்ற ஆசிரியர்களை மக்கள் தவறாக நினைக்க கூடாது. ஆகையால் இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்