மேட்டு தெரு ஸ்ரீ அவைய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.




கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.


இந்த நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். மேலும் சித்திரை மாதத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சித்திரை தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரி கொலுவிருக்க செய்தனர். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தவாறு சுவாமி சித்திரை மாத தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண