February 2024 Bank Holidays: பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


வங்கிகள் விடுமுறை:


வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 11 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் விடுமுறை:


பிப்ரவரி மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும்  சத்ரபதி சிவாஜி, பசந்த பஞ்சமி பண்டிகைக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, பிப்ரவரி 19ஆம் தேதி   சத்ரபதி சிவாஜி தினத்தை முன்னிட்டு கொல்கத்தா, புபனேஸ்வர் பகுதிகளில் வங்கிகள் மூடப்படும். ஆனால், அதே பண்டிகைக்காக மற்ற மாநிலங்களில் வங்கிகள் மூடப்படாது.


விடுமுறை தின பட்டியல்:



  • பிப்ரவரி 4: ஞாயிற்று கிழமை

  • பிப்ரவரி 10: இரண்டாவது சனிக்கிழமை

  • பிப்ரவரி 11: ஞாயிற்று கிழமை

  • பிப்ரவரி 14: பசந்த பஞ்சமி/சரஸ்வதி பூஜை  (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தா ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)

  • பிப்ரவரி 15: Lui-Ngai-Ni (இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை)

  • பிப்ரவரி 18: ஞாயிற்றுகிழமை

  • பிப்ரவரி 19: சத்திரபதி சிவாஜி மகாராஜ் ஜெயத்தி (மும்பை, பேலாபூர், நாக்பூர் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை)

  • பிப்ரவரி 20: மாநில தினம் (ஐஸ்வால், இட்டாநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)

  • பிப்ரவரி 24: சனிக்கிழமை

  • பிப்ரவரி 25: ஞாயிற்றுகிழமை

  • பிப்ரவரி 26: நியோகம் (இட்டாநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)


தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி கூடுதலாக எந்த விடுமுறையும் கிடையாது.  எனவே, பிப்ரவரி 10, 24 ஆகிய சனிக்கிழமைகளை தாண்டி எந்தவித கூடுதல் விடுமுறையும் இல்லை.  இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




மேலும் படிக்க


Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024 - மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை


Petrol Diesel Price Today: 617வது நாளில் வந்த மாற்றம்? சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?