கோலாகலமாக நடைபெற்ற மேலச்சாலை அன்னை அஜ்மத் பீவி தர்ஹா சந்தனக்கூடு கந்தூரி விழா

மேலச்சாலை அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவின் 83 -ஆம் சந்தனக்கூடு கந்தூரி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Continues below advertisement

சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்ஹா 83 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழாவில் அனைத்து மதத்தினர் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலையில் பிரசித்தி பெற்ற அன்னை அஜ்மத் பீவி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு இந்து, முஸ்லிம், கிருஸ்டின் என மத பாகுபாடு இன்றி அனைத்து மதத்தினரும் வருகை புரிந்து தங்கள் வேண்டுதலை வைப்பார்கள். மேலும் வேண்டுதல் அனைத்து நிறைவேறும் என்பதால் இந்த தர்காவிற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

Continues below advertisement

Ram lalla Idol: கருவறையில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை.. வெளியான முதல் படம் இணையத்தில் வைரல்..


இந்நிலையில் இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு கந்தூரி விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு கந்தூரி விழா கடந்த ஜனவரி 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு,  முக்கிய நிகழ்ச்சியான 83 வது ஆண்டு சந்தனக்கூடு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவில் சந்தனம் பூசும் வைபவமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு துவாக்கள் ஓதி வழிபாடு நடைபெற்றது. 

Thaipusam 2024: பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; இன்று முதல் வீதி உலா வரும் முருகப்பெருமான்


இதில் தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர் , மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் அன்னை அஜ்மத் பீவியின்  சீடர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் விழாவை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் ஏராளமானோர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Arupadai Veedu: "திருப்பரங்குன்றம் முதல் பழமுதிர்சோலை வரை" முருகனின் அறுபடை வீடுகள் எது? எது?

Continues below advertisement
Sponsored Links by Taboola