மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற சேண்டிருப்பு சுயம்பு முத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
சேண்டிருப்பு முத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழா..!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த சேண்டிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுயம்பு முத்து மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்பாள் சிம்ம வாகனம், சூரிய பிரபை, யானை வாகனம், சப்பரம், குதிரை வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா காட்சி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான பால்குடம்
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான இன்று பால்குட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்துக்கொண்டு ஏராளமான பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது.
இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். மேலும் பக்தி பரவசத்துடன் 20 அடி நீளம் அலகு குத்தியும், பூ பல்லக்கினை சுமந்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை தந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தமிழ் சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
PM Modi on Rahul Gandhi: அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் - பிரதமர் மோடி பேச்சு!