கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் திருவிழாவில் கருப்பண்ண சுவாமி பவனி.


சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் உள்ளூர் மாரியம்மன் பகவதி அம்மன் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி கரகம் பாலிக்கு நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து அக்னி சட்டி, பால்குடம் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.


 


 




 


இந்நிலையில், ராயனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கருப்பண்ண சுவாமி பவனி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கருப்பண சுவாமி வேடம் அணிந்து முக்கிய வீதியில் வழியாக அந்த வேடமணிந்த நபர் பக்தி பரவசத்துடன் வலம் வந்தார். அதை தொடர்ந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் வேடம் அணிந்து கருப்பண்ண சுவாமி உடன் வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து ஆலயம் மூன்று முறை சுத்தி வந்த பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மலையாள பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முன்னிட்டு தூக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது தோளில் தேரினை தூக்கி வலம் வந்தனர்.


 




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மலையாள பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கரகம் பாலித்தலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி பால்குடத் திருவிழாவும், 30ம் தேதி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும் தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.


 




 


அதனைத் தொடர்ந்து தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மலையாள பகவதி அம்மன் உற்சவர் சிலை எழுந்தருளிய தேரினை 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது தோளில் சுமந்து கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர் பகுதிகளில் பல்வேறு வீதிகளில் வலம் வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.